ஒரு நொடி தாங்க.. 2 உயிர் போச்சு! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.! 2 ஓட்டுநர்கள் உடல் நசுங்கி சம்பவ இடைத்திலேயே பரிதாப பலி..! அதிர்ச்சி வீடியோ...!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கோர சாலை விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். கிசான் சாலையில் வேகமாக வந்த கன்டெய்னர் லாரியும், பிக்கப் லோடர் வாகனமும் நேருக்கு நேர் மோதின. மோதல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் இரு வாகனங்களும் நொறுங்கின.
நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்
கிசான் சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரியும் பிக்கப் லோடரும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில் இரண்டு வாகனங்களின் முன்பகுதிகளும் பலத்த சேதமடைந்தன. ஓட்டுநர்கள் இருவரும் வாகனங்களுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: அதிகாலை 3 மணியளவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து! அமைச்சரின் மகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்.! பகீர் வீடியோ...!!!
பொதுமக்கள், போலீசார் இணைந்து மீட்பு
விபத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு திரண்டனர். தகவல் கிடைத்ததும் போலீசாரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரு ஓட்டுநர்களும் வாகனங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பித்னு சமூக நல மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணையில், குளிர்பானங்களை கடைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு திரும்பியபோது இந்த சாலை விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
சச்செண்டி போலீசார் விசாரணை
இதையடுத்து சச்செண்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் சிக்கிய இரு வாகனங்களையும் கைப்பற்றினர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்பூரில் நடந்த இந்த கன்டெய்னர் லாரி விபத்து குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓட்டுநர்களின் அடையாளம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
कानपुर। ट्राला-पिकअप की आमने-सामने भिड़ंत में दो की मौत। भीषण एक्सीडेंट में दोनों वाहनों के चालक की मौत। pic.twitter.com/Po33lXGK9d
— Danish Khan (@danishh_01_) September 25, 2026
இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பீடு... காரும் - மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் கோர விபத்து! 4 பேர் துடிதுடித்து பலியான சோகம்... பகீர் வீடியோ...!!!