இந்தியா

கர்ப்பப்பை அறுவை சிகிச்சையில் சோகம்.. மருத்துவரின் அலட்சியத்தால் இரத்தம் வெளியேறி பெண் துடிதுடித்து மரணம்.!

Summary:

கர்ப்பப்பை அறுவை சிகிச்சையில் சோகம்.. மருத்துவரின் அலட்சியத்தால் இரத்தம் வெளியேறி பெண் துடிதுடித்து மரணம்.!

மருத்துவரின் அலட்சியம் காரணமாக பெண்மணி உயிரிழந்துவிட்டதாக பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம், இதாகி கிராமத்தை சார்ந்தவர் நாகம்மா. இவர் கருப்பை பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். வயிற்று வலி என முதலில் அலட்சியமாக இருந்த நிலையில், மருத்துவமனை சென்றதும் விஷயம் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, நாகம்மா அங்குள்ள சஞ்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் நாகம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதன்பின்னர், திடீரென மீண்டும் நாகம்மாவுக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. 

இதனால் மருத்துவமனையில் வைத்து மீண்டும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்யட்ட நிலையில், நாகம்மாவுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு நாகம்மா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த தகவலை அறிந்த பெண்ணின் உறவினர்கள், சஞ்சனா மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே நாகம்மா உயிரிழந்துவிட்டார் என்று குற்றசாட்டை முன்வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்ணின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.


Advertisement