எவ்வளவு ஆசையா வீட்டுக்கு வந்துருப்பாரு! இரவு பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய கணவர்! மனைவி மார்பகங்கள் கிழிக்கப்பட்டு, 2 மகள்கள் கொடூரமாக இரத்த வெள்ளத்தில்! பகீர் சம்பவம்...
ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதி மூன்று உயிர்களை பலிகொண்ட கொடூர சம்பவத்தால் வெகுவாகக் கவலையடைந்துள்ளது. சீதாராம காலனியில் வசித்து வந்த பிரசாத் மற்றும் மாதுரி தம்பதியினரின் குடும்பம் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த இரவில் நடந்த நிகழ்வு அந்த மகிழ்வான வாழ்க்கையை நொறுக்கி விட்டது.
பிரசாத் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வந்தவர். வேலைக்காக சென்ற அவர், வீடு திரும்பிய போது மனைவி மாதுரி மற்றும் மகள்கள் புஷ்பகுமாரி (7) மற்றும் ஜெசி நோவா (5) மூவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரில்லாமல் கிடந்தனர். அந்தக் காட்சி பிரசாதின் உயிரையே குலைத்துவிட்டது.தகவல் பெற்ற போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விசாரணையில், மாதுரியின் மார்பகங்கள் மற்றும் தொடைப் பகுதிகளில் பிளேடால் உருவான ஆழமான காயங்கள் இருப்பது தெரியவந்தது. இது இந்த சம்பவத்தில் பாலியல் கொடுமை இருந்திருக்கலாம் என்பதற்கான சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.போலீசார், இந்த மூன்று பேர் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வலை வீசி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்... "உறங்கி கொண்டிருந்த விவசாயி எரித்து கொலை..." மர்ம நபருக்கு வலை வீச்சு.!!
சம்பவம் நடந்த பகுதில் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பிரசாத் குடும்பம் மீதான இந்த பயங்கர தாக்குதல் அந்தத் தெருவையே பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு பின்னால் உள்ள உண்மையை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி! நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலியின் உயிர்! சென்னையில் பரபரப்பு..