இந்தியா

டெல்லியில் தொடரும் பதற்றம்! பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு

Summary:

Journalist got bullet injury at delhi riots

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு துப்பாக்கி சூடு மற்றும் மேலும் இர்ணடு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் இந்த வன்முறை தொடர்ந்ததால், பதற்றம் நீடிக்கிறது. 

JK 24X7 செய்தி நிறுவனத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவருக்கு முஜ்பூர் பகுதியில் போராட்ட களத்தில் இருந்த போது துப்பாக்கி சூடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் NDTV யை சேர்ந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காவல்துறையை சேர்ந்த ரத்தன் லால் என்வரும் இறந்துள்ளார்.


Advertisement