இந்தியா லைப் ஸ்டைல்

இனி இலவசம் கிடையாது. ஜியோவின் திடீர் அறிவிப்பால் உச்சகட்ட அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்.

Summary:

Jio customers will have to pay 6 paisa per minute

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். கடந்த மூன்று ஆண்டுகளில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது ஜியோ நிறுவனம். ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டது.

ஜியோவின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் இன்டர்நெட் முதல் போன் கால் வரை அனைத்தையும் இலவசமாக வழங்கியதே. குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு இலவச 2G டேட்டாவை மட்டும் இலவசமாக வழங்கி அதிவேக டேட்டாவிற்கு ஜியோ நிறுவனம் கட்டணம் வசூலித்தது.

டேட்டா பிளான் ஆக்டிவேட் செய்தால் ஜியோ டு ஜியோ மற்றும் ஜியோ டு மற்ற நிறுவனங்களின் எண்கள் உட்பட அணைத்து அழைப்புகளையும் ஜியோ நிறுவனம் இலவசமாகவே வழங்கிவந்தது.

இந்நிலையில், இன்று வெளியான அறிவிப்பின் படி ஜியோ டு மற்ற நிறுவனங்களின் எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் ஜியோ வாடிக்கையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.


Advertisement