இந்தியா டெக்னாலஜி

டிக் டாக் செயலியின் தற்போதைய நிலை என்ன.? டிக் டாக் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பான் நிறுவனம் பேச்சுவார்த்தை.?

Summary:

Japan company tries to buy indias tik tok company

டிக் டாகின் இந்திய நிறுவனத்தை வாங்க ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

முன்னதாக கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி டிக் டாக் செயலின் பாதுகாப்பு குறைபாடுகளை காரணங்களாக கூறி இந்திய அரசு டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மீண்டும் டிக் டாக் செயலி இந்தியாவில் செயல்பாட்டுக்கு வர இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் டிக் டாக் நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் டிக் டாக் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துவிட்டது. அதேநேரம் டிக் டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்ய இருப்பதாக அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது. இதனால் உலகம் முழுவதும் டிக் டாக் செயலி மீதான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகள் எழுந்தன.

லாக்டவுனில் முதல் இடத்தை பிடித்த ...

இந்நிலையில் டிக் டாக் செயலியை விற்பனை செய்ய டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் முடிவு செய்தது. இன்னிலையில் அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தை வாங்க வால்மார்ட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் டிக்டாக் நிறுவனத்தை விற்பனை செய்ய அதன் தாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்  ஜப்பானை சேர்ந்த ஸாப்ஃட்பேங்க் நிறுவனம் இந்தியாவிற்கான டிக் டாக் செயலொயை வாங்க டிக் டாக் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Advertisement