இந்தியா

பர்தா அணிந்து வந்து, CRPF படை மீது வெடிகுண்டு வீசிய பெண் - பரபரப்பு வீடியோ..!

Summary:

பர்தா அணிந்து வந்து, CRPF படை மீது வெடிகுண்டு வீசிய பெண் - பரபரப்பு வீடியோ..!

CRPF பாதுகாப்பு படையினர் மீது பர்தா உடையணிந்து வந்த பெண் வெடிகுண்டு வீசிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்க இந்திய இராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். உள்ளூரிலேயே பயங்கரவாத ஆதரவு நபர்கள் மக்கள் போல வசித்து வரும் நிலையில், அவ்வப்போது அவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

சில நேரங்களில் அவர்கள் ஆயுதமேந்தி காவல் துறையினர் மற்றும் மக்களுக்கு தீங்கு இழைத்தால் என்கவுண்டர் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபூர் பகுதியில் சி.ஆர்.பி.எப் படைகளின் மீது பர்தா அணிந்து வந்த பெண் வெடிகுண்டு வீசி சென்றுள்ளார். 

சுதாரித்த அதிகாரிகள் வெடிகுண்டை விட்டு உடனடியாக தள்ளி சென்றதால் பெரும் அசம்பாவித உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசி சென்ற பெண்ணின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்துள்ள நிலையில், அவரை விரைந்து கைது செய்வோம் என காஷ்மீர் IGP விஜய் குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement