இந்தியா

மசூதிக்குள் இந்தியாவிற்கு எதிரான கோஷம்... இருதரப்பு வாக்குவாதத்தால் பரபரப்பு.. 13 பேர் கைது.!

Summary:

மசூதிக்குள் இந்தியாவிற்கு எதிரான கோஷம்... இருதரப்பு வாக்குவாதத்தால் பரபரப்பு.. 13 பேர் கைது.!

3 வருடம் கழித்து தொழுகைக்கு திறக்கப்பட்ட மசூதிக்குள் பாகிஸ்தான் ஆதரவு கோஷமெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் வருடம் இரத்து செய்யப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அங்குள்ள ஸ்ரீநகர் ஜாமியா மசூதி மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், மசூதி மூடியே இருந்தது.

கொரோனா குறைவானதை தொடர்ந்து மசூதியில் ஜமாஅத் தொழுகை நேற்று தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேத்ராயனளில் 24000 பேர் தொழுகை நடத்திய நிலையில், சிலர் தேசவிரோத கோஷத்தை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரியவரவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி 13 பேரை கைது செய்தனர். எதிரெதிர் கோஷத்தின் காரணமாக இருதரப்பு வாக்குவாதமும் அங்கு நிலவியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Advertisement