வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
600 பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து.. சென்னை ஐடி வாலிபர் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்!! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!!
சென்னையில் வசித்து வருபவர் கிளமென்ட் ராஜ் செழியன். 33 வயது நிறைந்த இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் அவருக்கு அங்கு இரவு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்வேளையில் அவரது மனைவி பணிக்கு சென்றுவிடுவார்.
இவ்வாறு வீட்டில் தனிமையில் இருந்த அவர், இந்தியாவில் பலமாநிலங்களிலும் உள்ள இளம்பெண்களின் செல்போன் எண்களை e-classified portal மூலம் சேகரிக்க தொடங்கியுள்ளார். பின்னர் அவர்களுக்கு போன் செய்து மனித வளத் துறையில் மேலாளராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தன்னை நம்பி நன்றாக பேசும் பெண்களிடம் நட்சத்திர ஹோட்டல்களில் நல்ல சம்பளத்துடன் வேலை இருப்பதாகவும், அதற்கு நன்கு அழகான மற்றும் கவர்ச்சியாக இருக்கும் பெண்கள் தேவை எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்காக புகைப்படங்கள் மற்றும் நிர்வாண புகைப்படங்களையும் தனக்கு அனுப்ப கூறியுள்ளனர்.
மேலும் பல பெண்களுக்கு வீடியோ கால் செய்து, நிர்வாண கோலத்தில் நிற்க செய்து அதனை செல்போனில் பதிவு செய்து கொண்டுள்ளார். பின்னர் அந்த நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை கொண்டு பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்துள்ளார் .இவ்வாறு செழியன் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உட்பட 600க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் செழியன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ள செல்போன், லேப்டாப், பென்ட்ரைவ் போன்றவை கைப்பற்றப்பட்டது. மேலும் செழியனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.