நீங்க தமிழரா? இந்தியரா? அதிரடியான கேள்விக்கு நச்சென்று பதிலளித்த இஸ்ரோ தலைவர் சிவன்!! குவியும் வாழ்த்துக்கள்!! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா டெக்னாலஜி

நீங்க தமிழரா? இந்தியரா? அதிரடியான கேள்விக்கு நச்சென்று பதிலளித்த இஸ்ரோ தலைவர் சிவன்!! குவியும் வாழ்த்துக்கள்!!

உலகமே பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்தியாவில் இருந்து சந்திரயான்-2 ஏவப்பட்டது. மேலும் சந்திரயான்-2  விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால் நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அருகே சென்றபோது விக்ரம் லேண்டர் சிக்னலை இழந்தது திடீரென விஞ்ஞானிகளுடன் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கடின உழைப்பை கொடுத்து,  பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோவின் தலைவரான சிவன் கண்ணீர் விட்டு அழுதார். இருப்பினும் அவரை புகழ்ந்து அவரது கடின உழைப்பை பாராட்டி பலரும் பெருமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சிவனிடம்,  தமிழனாக நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளீர்கள், தமிழக  மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சிவன் முதலில் நான் ஒரு இந்தியன். இஸ்ரோவில் ஒரு இந்தியனாகவே பணியில் அமர்ந்தேன். இஸ்ரோவில், நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் பணி செய்கிறார்கள். பல மொழி பேசும் மக்கள் நாட்டின் வெற்றிக்காக உழைக்கின்றனர் என்று பதிலளித்துள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo