"கேடில் முடிந்த இன்ஸ்டாகிராம் நட்பு..." 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய உறவினர்.!! 7 பேர் கைது.!!



instagram-friendship-turns-sour-7-arrested-for-sexual-h

மகாராஷ்டிரா கல்யாண் பகுதியில் 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராமில் கடந்த மார்ச் மாதம் தெரிந்த உறவினரிடமிருந்து  வந்த பாலோ ரெக்வெஸ்ட்டை ஏற்றுக்கொண்டு அவரிடம் பேசி வந்துள்ளார். இந்த நபர் மற்றொரு நபரையும் அந்த பெண்ணிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.அவருடனும் சிறுமி சகஜமாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி அந்த நபருடன் நெருக்கமாக பழகியுள்ளார். உடல் ரீதியான உறவுகளிலும் இருந்துள்ளார். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள் நெருக்கமான வீடியோக்களை பதிவு செய்து அதனை தனக்கு தெரிந்த 6 நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை காட்டி பலமுறை சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

India

இதனால் சிறுமி கர்ப்பமாகி பின்னர் அந்த சிசு கலைக்கப்பட்டது. இந்த சம்பவம் ஒரு உறவினர் மூலம் தந்தைக்கு தெரியவந்தது. அந்த நபர் வைரலான இந்த வீடியோவை காட்டியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த தந்தை சிறுமியிடம் இதைப் பற்றி கேட்டுள்ளார். தனக்கு நடந்ததை கூறிய பின் அருகிலுள்ள காவல் நிலையத்தில் திங்கட்கிழமை சிறுமியின் தந்தை புகாரளித்தார்.

இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!

புகாரின் அடிப்படையில் அந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  செப்டம்பர் 30 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஒரு நபரை தொடர்ந்து தேடி வருவதாக காவல் ஆய்வாளர் பலிராம் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்த சிறுமி பாலியல் வன்புணர்வு... 62 வயது கிழவனின் வெறி செயல்.!!