படிக்கும்போதே மாரடைப்பால் சுருண்டு விழுந்து மாணவர் பலி.! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

படிக்கும்போதே மாரடைப்பால் சுருண்டு விழுந்து மாணவர் பலி.! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!



Indore student died in class heart attack

 

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜா லோதி. இவர் இந்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கோச்சிங் சென்டரில் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயின்று வந்துள்ளார். 

நேற்று வகுப்பறையில் ராஜா படித்து கொண்டிருந்த நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சரிந்து விழுந்தார். இதனை கண்டு அதிர்ந்த சக மாணவர்கள் எழுப்ப முற்பட்டும் எந்த பயனும் இல்லை.

இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.