கொரோனா சமயத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயல்! இளம் இந்திய வீரர் பலி! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

கொரோனா சமயத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயல்! இளம் இந்திய வீரர் பலி!

எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவ முயற்சிப்பதைத் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியது.

இந்தநிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டாரில்  உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியாகினார். அந்த தாக்குதலில் உயிரிழந்த 24 வயதான வீரரின் தியாகம் மற்றும் கடமை மீதான பக்திக்கு தேசம் எப்போதும் அவருக்கு கடன்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. கொரோனா சமயத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo