இந்தியா

இந்திய பெண்கள் மத்தியில் குறைந்து வரும் கருவுறுதல் விகிதம்; காரணம் இது தானாம்.!

Summary:

indian pragnent ladies ratio decrease - surve

இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் கல்வி அறிவு காரணமாக கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இந்தியாவில் கருவுறுதல் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகியவற்றை மாநில மற்றும் தேசிய அளவில் கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம்.

2017 ஆம் ஆண்டிற்காக வெளியான மாதிரி பதிவு அறிக்கையில் 2013 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் பெண்களின் கருவுறுதல் விகிதம் 2.3 இருந்தது. இது தற்போது 2.2 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு(1.6), கேரளா(1.7), கர்நாடகா(1.7), தெலுங்கானா(1.7), ஆந்திரா(1.6) ஆகிய மாநிலங்களில் குறைவான கருவுறுதல் விகிதம் பதிவாகியுள்ளது. ஆனால் பீகார் மாநிலத்தில் 3.2 விதமாக உள்ளது.

ஏனெனில் 26.8 சதவீதம் பெண்கள் பீகார் மாநிலத்தில் கல்வி அறிவு அற்றவர்களாக உள்ளனர். அதேவேளையில் குறைவான கருவுறுதல் விகிதம் கொண்ட கேரளாவில் 0.7% பெண்களே கல்வியறிவு அற்றவர்களாக உள்ளார்கள். ஆகவே பெண்களின் கல்வியறிவு கருவுறுதல் வீதம் குறைவுக்கு முக்கிய காரணமாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Advertisement