இந்தியா

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு இன்று பிறந்தநாள்! யார் அந்த வீர பெண்மணி? தெரிந்துகொள்வோம்!

Summary:

indian first women ips officer birthday

கிரண் பேடி ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் டெல்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். இவர்  9 ஜூன், 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இன்றைய அவரது பிறந்தநாளுடன் அவருக்கு வயது 71 ஆகிறது.

திஹார் சிறையின் தலைமைப்பொறுப்பு இவர் வசம் வந்த பொழுது அனைவரும் திகைத்தனர். எப்படி சமாளிப்பார் என்று? ஆனால் அவர் அங்கு குற்றவாளிகளை மனிதர்களாக பார்த்தார். அங்கே பத்து சதவிகிதம் பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதையும் கவனித்தார். அவர்களுக்கு யோகா,போதை பழக்கத்தில் இருந்து விடுதலை,விளையாட,கல்வி கற்க ஏற்பாடுகளையும் செய்தார்.

கிரண் பேடி, நலவாழ்வு மற்றும் குற்றத்தடுப்பு காவல் குறித்து 1987ஆம் ஆண்டு நவ்சோதி என்ற அமைப்பையும், சிறை சீர்திருத்தங்கள், போதைமருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் குறித்து 1994ஆம் ஆண்டு இந்தியா விஷன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார்.

2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார். 2016 ஆம் ஆண்டு மே 29 இல் இருந்து புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். இன்றைய 09.06.2020 பிறந்தநாள் விழாவன்று பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement