மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
16 தையல் போடும் அளவு பகீர்.. மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவன்.!

கணவன் - மனைவி சண்டையில், ஆத்திரத்தில் இருந்த கணவர், மனைவியின் உதடுகளை கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மனிதில் உள்ள மதுரா, நக்லா புச்சான் கிராமத்தில் வசித்து வருபவர் விஷ்ணு. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகள் இருவரும் தற்போது தங்களின் இல்லத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடும்பத்துடன் விஷ்ணுவின் சகோதரர், தாய் தங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை காரில் கடத்தி சீரழித்த இளைஞர்; ஓடும் காரில் இருந்து தள்ளிவிட்டு பெருங்கொடுர செயல்.!
உதடுகளில் கடும் காயம்
இதனிடையே, சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த கணவர் விஷ்ணு, மனைவியிடம் திடீரென வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் உண்டாகிய நிலையில், விஷ்ணு தனது மனைவியை கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், அவரின் உதடுகளை கடித்து சேதப்படுத்தி இருக்கிறார்.
16 தையல்
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் அனுமதியாகி 16 தையல்கள் போடப்பட்ட நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் தனது கணவர், மாமியார், மைத்துனர் ஆகியோருக்கு எதிராக எழுத்துபூர்வமாக நடந்ததை புகாராக பதிவு செய்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் திருட்டு முயற்சி.. ஊரே கூடி திருடனை கொலை செய்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்.!