புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தீ விபத்தில் சிக்கி பிஸ்கட் நிறுவனத்தின் உரிமையாளர், மனைவி, பணிப்பெண் என 3 பேர் பலி; கண்ணீர் சோகம்.!
தொழிலதிபர், அவரின் மனைவி, வீட்டுப் பணியாளர் தீ விபத்தில் உயிரிழந்த சோகம் கான்பூரில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், கஃதேவ் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் சஞ்சய் ஷியாம் தசானி (வயது 48). இவரின் மனைவி கனிகா தசானி (வயது 42). இவர்களின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த பெண்மணி சப்பி சவுகான் (வயது 24).
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.!! கையும் களவுமாக சிக்கிய டிடிஆர்.!!
தொழிலதிபரான சஞ்சய் அம்பாஜி புட்ஸ் எனப்படும் உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் பாண்டு நகரில் உள்ள 3 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.
பூஜையில் விபரீதம்
வீடு முழுவதும் பெரும்பாலும் மரங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே, தீபாவளி அன்று இரவில் இவர்களின் வீட்டில் பூஜை மற்றும் விருந்து ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கதவு பொருத்தப்பட்டுள்ள படுக்கை அறைக்குள் தம்பதிகள் மற்றும் பணிப்பெண் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்களால் வீட்டில் இருந்து வெளியேற இயலவில்லை.
மூவரும் பலி
தம்பதிகளின் மகன் ஹரிஷ் தசானி தீபாவளி கொண்டாட்டத்திற்காக வெளியே சென்றுள்ளார். இவர்கள் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் வகை இருப்பதாய் கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் அனைவரும் பலியாகிவிட்டனர்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தன்னை ட்ரோல் செய்த யூடியூபர்களுக்கு எதிராக நீதிமன்ற சம்மன் வழங்கிய 10 வயது சிறுவன்; யார் இந்த அபினவ் அரோரா.!