அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
மனைவியை பைக்கில் கட்டி இழுத்து வந்த கொடூர கணவன்; போதையில் பதறவைக்கும் செயல்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகௌர் மாவட்டம், நாகூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ராம் மேக்வால் (வயது 40). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார் அதாவது, அங்குள்ள மாவட்டங்களில் இளம்பெண்களின் வறுமையில் வாடுவோரை தேர்வு செய்து, பணம் கொடுத்து அவர்களை தங்களின் வீட்டிற்கு அழைத்து வந்து மனைவி போல குடித்தனம் நடத்துவர்களாம்.
பாலியல் அடிமைகளாக பெண்கள்
இவ்வாறான பெண்களை கயவர்கள் பாலியல் அடிமைபோல பயன்படுத்தி, மிகுந்த சித்ரவதைக்கு உட்படுத்துவதாகவும் தெரியவருகிறது. அவ்வாறாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 இலட்சம் பணம் கொடுத்து பெண் அழைத்து வரப்பட்டுள்ளார். இந்த நடைமுறை சட்டத்திற்கு எதிரானது எனினும், திரைமறைவில் அதனை செய்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெர்மனிய பெண்ணை பலாத்காரம் செய்த விவகாரம்; குற்றவாளி புற்றுநோயால் உயிரிழப்பு.!
பகீர் சம்பவம்
அவ்வாறாக ப்ரேமால் அழைத்து வரப்பட்ட பெண்மணி, சம்பவத்தன்று தனது சகோதரியை பார்க்க செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடிபோதை நபர் பிரேம், பெண்ணின் கால்களில் கயிற்றைக்கட்டி இருசக்கர வாகனத்தில் முடிந்து வீதியில் இழுத்து வந்துள்ளார். இந்த பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த விஷயம் குறித்து நாகூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளியையும் கைது செய்துள்ளனர்.
⚠️ Disturbing Visual⚠️
— Sachin Gupta (@SachinGuptaUP) August 13, 2024
राजस्थान : नागौर में पति ने शराब के नशे में पत्नी को बाइक से बांधकर गांव में घसीटा। आरोपी पति प्रेमाराम मेघवाल गिरफ्तार हुआ। pic.twitter.com/Ru1x6CpNza
இதையும் படிங்க: மனைவியை சந்தேகப்பட்டு செல்போனில் சிப்; இறுதியில் நடந்த விபரீத கொலை.. இப்படியுமா மனுசங்க இருப்பாங்க?.!