3 வயது சிறுமி நாய் தாக்கி பலி.. 2 நாட்கள் போராடி பிரிந்த உயிர்.. கண்ணீர் சோகம்.!



in Maharashtra Rajkot 3 Year Old Girl Dies Dog Attack

பெற்றோருடன் தோட்டத்துக்குச் சென்ற சிறுமி நாய் தாக்குதலில் உயிரிழந்த சோகம் கண்ணீரை வரவழைக்கிறது.

கூலித்தொழிலாளர்கள்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், வீரவல், நவாபரா பகுதியில் வசித்து வரும் சிறுமி அஸ்வினி பவார் (வயது 3). சிறுமி தனது 2 மூத்த சகோதரிகள், பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள் என்பதால், அவ்வப்போது புலம்பெயர்ந்து பணியாற்றி வந்துள்ளனர். குழந்தைகளையும் தங்களுடன் அழைத்துச் செல்வத்தையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: Namakkal: விஷப்பூச்சி கடித்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. கண்ணீரில் பெற்றோர்.!

நாய் தாக்கியது:

இதனிடையே, சம்பவத்தன்று நகரில் உள்ள ஒரு பண்ணையில் சிறுமியின் பெற்றோருக்கு வேலை வந்துள்ளது. அவர்கள் அஸ்வினியை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, பண்ணையில் இருந்த நாய் ஒன்று சிறுமியை கடுமையாக தாக்கி இருக்கிறது.

Crime news

சிகிச்சை:

இதனால் அலறிய சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், மகளை மீட்டு 2 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சிறுமி ஜனான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 2 நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமி பலி:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை.. பறிபோன 3 உயிர்கள்.. அருவியில் 3 பெண்களின் அதிரவைக்கும் வீடியோ.!