ஒரே பாட்டிலில் சோடா குடித்த மூவர் அடுத்தடுத்து பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



in Gujarat 3 Dies after Drinking soda 

 

சோடா வாங்கி குடித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள கேடா மாவட்டம், நாடியாட் பகுதியில் வசித்து வருபவர் கனு சௌகான் (59). இதே கிராமத்தில் வசித்து வருபவர் ரவீந்திர ரதோட் (50), யோகேஷ் குஷ்வா (40).

இதையும் படிங்க: 6 சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்த எச்ஐவி பாதித்த நபர்; உணவு கொடுக்காமல் சித்ரவதை.!

இவர்கள் மூவரும் சம்பவத்தன்று சோடா வாங்கி வந்த நிலையில், அதனை குடித்த மூவரும் அடுத்தடுத்து சில நிமிடத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

மூவரும் மரணம்

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குளிர்பானம் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. 

இதனால் அவர்களை யாரேனும் கொலை செய்ய முயற்சித்தினரா? என்ன நடந்தது? என அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: குப்பையில் சடலமாக கிடந்த சிசு.. இன்ஸ்ட்டா நட்பால் நேர்ந்த விபரீதம்.. 16 வயதில் சோகம்.!