23 வயது இளைஞருடன் 20 வயது இளம் பெண்ணுக்கு கள்ளக்காதல்.. கணவன் கூட எடுத்து கூறியும் அடங்காத ஆசை! இறுதியில் நடந்த சோகம்

23 வயது இளைஞருடன் 20 வயது இளம் பெண்ணுக்கு கள்ளக்காதல்.. கணவன் கூட எடுத்து கூறியும் அடங்காத ஆசை! இறுதியில் நடந்த சோகம்


Illegal relationship 23 years old boy dead in Andhra

ஆந்திரபிரேதேசத்தை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததில் இளைஞர் உயிரிழந்தநிலையில், இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் யாதமரி மண்டலம் தெல்லரால்லப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார் (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 20 வயது இளம் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம் பெண்ணின் கணவருக்கு தெரியவர, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் தங்கள் கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. இந்நிலையில் மனைவி மற்றும் அந்த இளைஞரை பெண்ணின் கணவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து வீட்டில் இருந்து இருவரும் தலைமறைவாகி தோனிரேவுலப்பள்ளி அருகில் உள்ள வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

வனப்பகுதியில் இவர்கள் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் திலீப் குமார் அதற்கு முன்னதாக இறந்துவிட்டார். தற்போது அந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.