ஒரு நொடி தாங்க.... 5 வயது புள்ளையை தரையில் இழுத்து போட்டு கடித்து குதறிய தெரு நாய்! சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சி!



hyderabad-stray-dog-attack-school-girl-cctv-viral

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தெருநாய் தாக்குதல் சம்பவம் மக்கள் கவலையை அதிகரித்துள்ளது. பள்ளிக்குச் சென்ற சிறுமி மீது எதிர்பாராதவிதமாக நாய் தாக்கிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி, நகர பாதுகாப்பு குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

பள்ளிக்குச் சென்றபோது நிகழ்ந்த தாக்குதல்

கைரதாபாத் பகுதியில் வசித்து வரும் யுகேஜி படிக்கும் ஐந்து வயது சிறுமி, செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு தெருநாய் திடீரென அவள்மீது பாய்ந்து முகத்தில் கடித்து கொடூரமாக தாக்கியது.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடித்துக் குதறிய 10 தெரு நாய்கள்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!

சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்

சிறுமியைத் தரையில் தள்ளி கன்னத்தில் கடித்துக் கொண்டிருந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணிச்சலுடன் மீட்ட பொதுமகன்

அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் உடனடியாக நாயை விரட்டி சிறுமியை காப்பாற்றினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... 6 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பிய பிட்புல் நாய்! குழந்தை அலறி துடித்து ஓடினாலும் அந்த நாய் விடல...பகீர் காட்சி!