13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்.!
சமீப காலமாக கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து செய்வதும், கள்ளக்காதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், சில அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமாள் பைத்யா. இவருக்கு அபர்ணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இதில் மனைவி அபர்ணாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிடும் பழக்கம் இருந்துள்ளது. இதற்கு அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும், மனைவி அபர்ணாவிற்கு ஆன்லைன் மூலம் ஆண் நண்பருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.