இந்தியா காதல் – உறவுகள்

காதல் மனைவியின் தலையுடன் ராஜநடை போட்ட வாலிபர்.! இதுதான் காரணமா? வெளியான மிரள வைக்கும் பகீர் சம்பவம்

Summary:

husband killed wife for baby problem

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் பிரபு குமார் இவரது மனைவி கிரண்டி. பிரபு குமார் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த போது அதே மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய கிரண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் இந்த காதல் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை இல்லாமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை வந்தது. மேலும் இத்தகைய கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் கிரண்டி பிரபு தன்னை அடிக்கடி சந்தித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும்  அதனால் பிரபுக்குமார் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ஜாமினில் இருந்து வெளியே வந்த பிரபு சில நாட்களுக்குப் பிறகு நேற்று கிரண்டி வீட்டிற்கு வந்து அவரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் அப்பொழுது ஆத்திரமடைந்த அவர் கத்தியால் கிரண்டியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் வெட்டிய தலைகளை தூக்கிக் கொண்டு தெருவில் நடந்து சென்று அங்கிருந்த கால்வாய் ஒன்றில் தூக்கி போட்டுள்ளார்.

 அதனை தொடர்ந்து நேராக காவல் நிலையத்திற்கு சென்ற பிரபுக்குமார் தான் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement