"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
மனைவியை கொன்று ஏரியில் வீசிய கணவர்: விவாகரத்து தராததால் ஆத்திரம்..! நடந்த பேரதிர்ச்சி சம்பவம்..!
விவாகரத்து தராததால் மனைவியே கொன்று உடலை போர்வையில் கட்டி ஏரியில் வீசியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த கோர்லகுண்டாவை சேர்ந்தவர் பத்மா இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேணுகோபாலுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான நாளிலிருந்தே வேணுகோ பாலுக்கும், பத்மாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துவந்துள்ளது.
மேலும் வேணு கோபாலின் பெற்றோர்களான பாண்டுரங்கச்சாரி மற்றும் ராணி ஆகியோர் வரதட்சணை போதவில்லை என்று கூறி பத்மாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேணுகோபால் பத்மாவிடம் இருந்து விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பத்மாவுக்கு விவாகரத்து செய்வதில் விருப்பமில்லை. இதன் காரணமாக ஆத்திரமடைந்த வேணுகோபால், பத்மாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
திட்டமிட்டபடி மனைவியை தனியாக அழைத்து சென்ற வேணுகோபால் அவரது தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பத்மா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் வேணுகோபால் அவருக்கு துணையாக இருந்த சந்தோஷ் மற்றும் வேணுகோபாலின் பெற்றோர் ஆகிய 4 பேரும் பத்மாவின் உடலை போர்வையால் போர்த்தி, உடலை இறுக்கி கட்டி காரின் பின்பக்க டிக்கியில் வைத்து வெங்கடாபுரம் ஏரியில் வீசியுள்ளனர்.
இந்த நிலையில் விவாகரத்து வழக்குக்காக வேணுகோபால், பத்மாவை கோர்ட்டுக்கு அழைத்து வருவார் என பத்மாவின் பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால் மே 18 ஆம் தேதி விவாகரத்து வழக்கை ஒத்திவைக்க வேணுகோபால் தனியாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். கோர்ட்டு வளாகத்தில் பத்மா குறித்து பத்மாவின் பெற்றோர் விசாரித்தபோது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில், வேணுகோபால் பத்மாவை கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.