இந்தியா காதல் – உறவுகள்

தனது மனைவிக்கு கோலாகலமாக திருமணம் செய்துவைத்த கணவன், அதிரடி முடிவுக்கு பின்னால் மறைந்திருக்கும் அதிர்ச்சி காரணம்.!

Summary:

husband help to wife marry her lover

3 வயது குழந்தை இருக்கும் நிலையில்  கணவனே தனது மனைவியை அவரது காதலனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம்  கோலிபூர் கிராமத்தில் வசித்து வருபவர்  பிகாஷ் . 32 வயது நிறைந்த இவர் கொல்கத்தாவில் பிளம்பராக பணிபுரிந்து வந்தார். இவர்  சகரிகா என்ற பெண்ணை கடந்த 2014-ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு  மூன்று வயதில் பெண் குழந்தை இருந்தது .

இந்நிலையில் வேலை காரணமாக கொல்கத்தாவில் இருந்த பிகாஷ் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே தனது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில்  சகரிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது .

இது குறித்து தகவல் அறிந்த  பிகாஷ் உடனடியாக தனது வீட்டுக்கு வந்து  இதைக்கேட்டு மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

அதற்கு, தான் சுரேஷை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சகரிகா கூறியுள்ளார். மேலும் விருப்பம் கொண்டவருடன் சேர்ந்து வாழ்வது தவறில்லை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிகாஷ் தனது மனைவி சகரிகாவை அவரின் காதலன் சுரேஷுக்கே திருமணம் செய்து வைக்க அதிரடியாக முடிவெடுத்து திருமணம் செய்துவைத்தார்.

பிமேலும் திருமணத்துக்கு பின்னர் சுகரிகா தனது குழந்தையை தன்னுடன் அழைத்து சென்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement