இந்தியா

தன் நண்பர்களுக்காக மனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த செயல், இறுதியில் நேர்ந்த விபரீதம்.!

Summary:

husband firce wife to dance in nude

கணவன் தன் நண்பர்கள் முன்னே நிர்வாணமாக நடனம் ஆட வற்புறுத்தியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஹனுமானந்தா ராவ். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வெள்ளப்பா மாதுரி என்ற பெண்ணை  திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத் திரும்பிய மாதுரி, நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார்  விசாரணைகளை மேற்கொண்டனர் .

அப்பொழுது ராவ் விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்துள்ளார். மேலும் அவர்களின் கண்முன் மனைவியை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement