போதை மருந்து கொடுத்து செய்யக்கூடாததை மனைவிக்கு செய்த கொடூர கணவன்! குடும்பமே சேர்ந்து மிரட்டல்.... அப்பாவி பெண்ணின் பகீர் பின்னணி இதோ.!!!



husband-drugs-wife-sexual-assault-case-sambhajinagar

மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் 20 வயது இளம்பெண்ணுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் கொடூரமான பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரே மயக்க மருந்து கொடுத்து நண்பரிடம் ஒப்படைத்ததாகவும், குடும்பத்தினரும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

குடும்பத்தினரே மிரட்டியதாக குற்றச்சாட்டு

புகாரின்படி, 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை அந்தப் பெண் தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளார். கணவரின் நண்பரான ஷேக் ரிஸ்வான், பெண்ணின் செல்போன் எண்ணைப் பெற்று தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவரிடமும் மாமனார் வீட்டினரிடமும் அவர் முறையிட்டபோதும், நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவரையே மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரையில் ஹீரோ.... ஆனால் நிஜத்தில் இப்படியா? 10 வருடமாக 41 வயது பெண்ணை சீரழித்த பிரபல நடிகர் கைது! பரபரப்பில் பாலிவுட்..!!

மயக்க மருந்து கொடுத்து நண்பரிடம் ஒப்படைத்ததாக புகார்

கடந்த ஏப்ரல் மாதத்தில், கணவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும், அதன்பின் தனது நண்பரான ரிஸ்வானிடம் ஒப்படைத்ததாகவும் பெண் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் ரிஸ்வான் அவரை ஓர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவில் ஒருவர் கைது

இதற்கிடையில், நடந்தவற்றை அறிந்த மைத்துனரும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஷேக் ரிஸ்வானை கைது செய்துள்ளது. மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மீது ஏற்கனவே போக்ஸோ சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!