இரவில் குளிர்பானம் கொடுத்த கணவன்! நம்பி குடித்த புதுமணப் பெண்ணிற்கு விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி!

இரவில் குளிர்பானம் கொடுத்த கணவன்! நம்பி குடித்த புதுமணப் பெண்ணிற்கு விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி!


Husband cheat wife and escape with money and jewels

டெல்லிக்கு அருகே உள்ளே சஞ்சய் காலனி பகுதியில் வசித்து வந்தவர் ரமா அரோரா. அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமிர்தசரசில் தாப் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வந்த அருண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது ரமா குடும்பத்தினர் வீட்டு பொருட்கள், தங்க ஆபரணங்கள் ஆகியவை  வரதட்சணையாக கொடுத்துள்ளனர். ஆனாலும் சில நாட்களில் அவரது மாமியார் வரதட்சணை கேட்டு ரமாவை துன்புறுத்த தொடங்கியுள்ளார். 

மேலும் அருண்குமார் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவ செலவிற்கு 1.50 லட்சம்  பணம் தேவைப்படுகிறது என கேட்டநிலையில், ரமா அவரது சகோதரர் மூலம் பணத்தை ஏற்பாடு செய்து அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அருண்குமார், ரமாவை அஜ்னாலா பகுதியில் உள்ள ராம்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக அழைத்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பின்னரும் அவர் தனது மனைவியை 5 லட்சம் பணம் வேண்டும், பைக் வேண்டும் என தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

money

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு  அருண்குமார் தனது மனைவிக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே ரமா மயங்கியுள்ளார். பின்னர் காலைமயக்கம் தெளிந்து பார்த்த போது, வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை  சுருட்டிக் கொண்டு அருண்குமார் ஓடியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.