பொய் சொன்னால் யாராக இருந்தாலும் அறை விழும்.! உ.பி. முதல்வர் யோகிக்கு நடிகர் சித்தார்த் கொடுத்த பதில்.!



http://www.puthiyathalaimurai.com/newsview/100606/Actor-Siddharth-Tweets-Any-false-claims-of-being-a-decent-human-being-or-a-holy-man-or-a-leader-will-face-one-tight-slap-and-this-comes-after-UP-Chief-Minister-Yogi-Adityanath-says-Hospitals-making-false-o

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகி உள்ளது. 

டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், இதனால் சிகிச்சைப் பலனிற்றி நோயாளிகள் இறந்ததாகவும் வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள்தொகை அதிகம் கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காதது உள்ளிட்டவைகளால் உயிரிழந்து வருகின்றனர். சுடுகாடுகள் நிரம்பி வழிகின்றன என்ற தகவலும் வந்துகொண்டே இருக்கின்றது.

இந்தநிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களை தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார். அவர் சொன்னதை பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் சித்தார்த், “சாமானியனாக இருந்தாலும் சரி, சாமியாராக இருந்தாலும் சரி, பொய் சொன்னால் அறை விழும்” என்று பதிவிட்டுள்ளார்.