மும்பையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.! திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா.!

மும்பையில் கொட்டித்தீர்க்கும் கனமழை.! திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா.!



heavy rain in mumbai

இந்தியாவில் பருவமழைக் காலம் தொடங்க உள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரின் மையப்பகுதியான லோயர் பரேல், சயான், மாதுங்கா, அந்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துவாங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை புரட்டி எடுத்தது. இதனால் நகரின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளம் மூழ்கியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் மும்பை நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிங்ஸ் சர்கில் பகுதியில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்தநிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஒருபக்கம் வாட்டி வதைத்து வந்தநிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்கள் சிக்கித்தவிக்கின்றனர்.