திருமணமான 2 மாதங்களில் புதுமணத்தம்பதி ஆணவக்கொலை; பூங்காவில் வைத்து சரமாரியாக சுட்டுக்கொலை.!Haryana Hisar New Married Couple Killed 


ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் மாவட்டம், ஹன்சி பகுதியில் சம்பவத்தன்று காதல் ஜோடி மர்ம கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த இவ்விசயம் விஷயம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், பலியான தம்பதிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி என்பது உறுதியானது. ஹிஸார் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்த ஆணும், படாலா கிராமத்தை சேர்ந்த பெண்ணும் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சரமாரியாக சுட்டுக்கொலை

இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோரை எதிர்த்து, கடந்த ஏப்ரல் 22ம் தேதி காசியாப்பத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் ஹன்சி பகுதியில் இவர்கள் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று பூங்காவுக்கு சென்ற புதுமண ஜோடி இருவர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பாஜக புள்ளியின் உறவினர் மரணம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!

கிட்டத்தட்ட 4 முதல் 5 குண்டுகள் அவர்களின் உடலை துளைத்து இருக்கிறது. அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் ஆணவக்கொலை நடந்தது அம்பலமாகவே, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணை தொடருகிறது. 

இதையும் படிங்க: ஒரு மணிநேரத்திற்கு ரூ.700 தான்.. காவலருடன் பெண்ணை அனுப்பிய கும்பல்., அதிரடி காட்டிய அதிகாரிகள்.!