14 வயது சிறுமி பலாத்காரம்: காவலரின் அதிர்ச்சி செயல்.. ஒட்டுமொத்த வேலைக்கும் உடனடி ஆப்பு., கைது.!Haryana Gurugram Cop Dismissed from Job and Arrest Under Pocso 

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த தலைமை காவலர், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இக்கொடூரம் நடைபெற்ற நிலையில், பெற்றோர் புகார் அளித்ததைத்தொடர்ந்து, விசாரணை நடைபெற்று தற்போது காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணையில், அனூப் சிங்கின் வீட்டில் சிறுமி பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த நிலையில், சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பலவந்தப்படுத்தி கயவன் பலாத்காரம் செய்துள்ளான் என்பது தெரியவந்தது. 

தலைமை காவலர் அனூப் சிங், ஹரியானா மாநில காவல்துறையில் விஐபி எஸ்கார்ட் பாதுகாப்பு பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.