வேனின் சக்கரம் ஏறி இறங்கியதில் 4 வயது சிறுமி துடிதுடிக்க மரணம்.. கண்ணீர் சோகம்.!

வேனின் சக்கரம் ஏறி இறங்கியதில் 4 வயது சிறுமி துடிதுடிக்க மரணம்.. கண்ணீர் சோகம்.!


Haryana Gurugram 4 Aged Child Died Van Hits

சாலையோரம் சென்ற சிறுமியின் மீது வேனின் சக்கரம் ஏறி, இறங்கியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், பேகம்பூர் கடோலா பகுதியில் வசித்து வரும் சிறுமி அனாமிகா (வயது 4). இவர் வீட்டிற்கு அருகே இருக்கும் தண்ணீர் குழாயில், சிறிய பாட்டில் மூலமாக தண்ணீர் பிடித்து வீட்டிற்கு கொண்டு வந்துகொண்டு இருந்தார். 

அப்போது, அவ்வழியே வந்த வேன் சிறுமியின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுமி வேனின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

haryana

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வேன் ஓட்டுனரை கைது செய்தனர். விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.