முகவரி கேட்பதுபோல் இளம் பெண் அருகில் வந்த இளைஞர்!! அடுத்த நொடி காத்திருந்த அதிர்ச்சி!! வைரல் வீடியோ..Guwahati girl trapped the abusive young man address asks

முகவரி கேட்பதுபோல் இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை அந்த பெண் லெப்ட் ரைட் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அசாம் மாநிலம்  கவுகாத்தியை சேர்ந்த பெண் பாவனா காஷ்யப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஒரு முகவரியை காட்டி விசாரித்துள்ளார்.

அதற்கு அந்த பெண் தனக்கு தெரியாது, வேறு யாரிடமாவது கேளுங்கள் ஏன கூறியுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த இளைஞர் திடீரென அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்துவிட்டு, அங்கிருந்த தப்ப முயன்றுள்ளார். இந்நிலையில் இளைஞரின் பிடியில் இருந்து சுதாரித்துக்கொண்ட அந்த பெண், அந்த இளைஞரின் இருசக்கர வாகனத்தை இழுத்து பிடித்து, அவருடன் சண்டை போட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் அந்த இளைஞரின் வாகனம் அங்கிருந்த சாக்கடை கால்வாயில் விழவே, அங்கிருந்து தப்பி செல்ல வழியில்லாமல் அந்த இளைஞர் அங்கிருந்தவர்களிடம் மாட்டிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.