மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ஆண் என பெண்ணை திருமணம் செய்து, அந்த விசயத்திற்கு மறுத்த பெண் : இறுதியில் சிக்கியது எப்படி?.. வெறுத்துப்போன மனைவி.!
தன்னை ஆண் என கூறி பெண்ணை திருமணம் செய்த பெண்ணின் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பத்தியத்திற்கு ஆண்டுக்கணக்கில் மறுத்த பெண் இறுதியில் சிக்கிக்கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா சேர்ந்த இளம்பெண், தனது கணவரை 2011-ல் விபத்தில் இழந்துள்ளார். பின்னர், கடத்த 2014-ல் திருமணம் செய்ய முடிவெடுத்த பெண்மணி, விராஜ் வரதன் என்பவரை திருமணம் செய்தார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் காஷ்மீருக்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், விராஜ் தாம்பத்திய விசயத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இவ்வாறாக பல ஆண்டுகள் கடந்துள்ளது.
ஒருகட்டத்தில் மனைவி கணவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும், அதற்காக அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அது முடிந்துவிட்டால் அனைத்தும் சுபம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் அவர் அறுவை சிகிச்சை செய்ய கொல்கத்தா செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், உண்மையில் அவர் ஆணுறுப்பு இணைப்பு அறுவை சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போதுதான் மனைவிக்கு தனது கணவர் ஒரு பெண் என்பது உறுதியாகவே, அதிர்ச்சியடைந்த பெண்மணி தன்னை ஏமாற்றிய நபரின் மீது கோத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.