எடப்பாடி அடுத்த 15 நாட்களில் எடுக்கப்போகும் இறுதி முடிவு என்ன?அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!!
மக்களே உஷார்.... ஏசி பைப் வழியாக உள்ளே வந்த 3 பாம்புகள்! ஏசியை ஆன் செய்ததும் சீறிய பாம்பு.... அலறியடித்து ஓடிய குடும்பம்! அதிர்ச்சி வீடியோ..!!!
குஜராத் மாநிலம் வல்சாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வீட்டில் இருந்தவர்கள் ஏசியை ஆன் செய்த சில நொடிகளிலேயே, அதற்குள் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று பாம்புகள் வெளியே வந்தன. இதையடுத்து வீட்டினர் அலறியடித்து வெளியே ஓடியனர்.
உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, மூன்று பாம்புகளையும் பாதுகாப்பாக பிடித்து அகற்றினர். தற்போது இந்த பாம்பு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏசி பைப் வழியாக நுழைந்த பாம்புகள்
தகவலின்படி, வீட்டின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த ஏசி அமைப்பின் வழியாகவே பாம்புகள் உள்ளே நுழைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக ஏசி வெளிப்பகுதி தரையோரம் அல்லது தோட்டப்பகுதியில் இருந்தால், பைப் லைன் வழியாக பாம்புகள் செல்ல வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் வெப்பமான இடங்களைத் தேடி பாம்புகள் ஏசி கம்ப்ரஸர் பகுதிகளுக்கு வருவது சாதாரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏசி பயன்படுத்தும் வீடுகளில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஏசி பைப் செல்லும் சுவற்றில் போடப்படும் துளைகளில் சிறிய இடைவெளி இருந்தாலும் அதை சிமெண்ட் அல்லது பசையால் நன்றாக அடைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விண்டோ ஏசி பயன்படுத்துபவர்கள் அதன் பக்கவாட்டு பகுதிகளில் திறந்த இடங்கள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
வீட்டைச் சுற்றி செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்திருந்தால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மரக்கிளைகள் ஜன்னல் அல்லது ஏசி அமைப்பைத் தொடாதவாறும் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பாம்புகள் வீட்டுக்குள் நுழையும் அபாயத்தை குறைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
वलसाड: एसी (AC) में घुसे तीन सांप
दीवार पर ऊंचाई पर लगे एसी के अंदर सांप कैसे दाखिल हुए, यह अभी भी लोगों के लिए आश्चर्य का विषय बना हुआ है।
जीवदया ग्रुप के सदस्यों ने मौके पर पहुंचकर एसी मशीन को खोला और एक-एक कर तीनों सांपों का सुरक्षित रेस्क्यू किया। pic.twitter.com/ZlpMP5lwD8
— Dixit Soni (@DixitGujarat) May 13, 2026
இதையும் படிங்க: ஹோட்டல்ல கள்ளக்காதலியுடன் கும்மாளம்.....கையும் களவுமாகப் பிடித்த மனைவி! அதிரடியாக மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவை பாருங்க.... வைரல் வீடியோ!!!