பாத்ரூம் பைப் பிடித்து ஏறி 26 வயது இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி; இளைஞரின் அதிர்ச்சி செயல்.. கதறிய பெண்மணி.!Gujarat Ahmedabad Women Rape Attempt Climbing Bathroom Pipe Via Toilet to Enter Room 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரோடா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில், 26 வயதுடைய பெண்மணி தனது கணவருடன் சம்பவத்தன்று தங்கி இருந்தார். 

தம்பதிகளின் இல்லம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், தங்கும் விடுதியில் கடந்த ஒன்றரை மாதமாக இருவரும் தங்கியிருப்பதாக தெரியவருகிறது. 

இந்நிலையில், அக்.23ம் தேதியான நேற்று மதியம் 03:30 மணியளவில், தங்கும் விடுதியின் பைப்களை பிடித்து தம்பதி வசிக்கும் கழிவறை வழியே அறைக்குள் நுழைந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு வற்புறுத்தி இருக்கிறார். கற்பழிக்க முயற்சியும் நடந்துள்ளது.

இதனால் பதறிப்போன பெண்மணி தன்னை காப்பாற்றக்கூறி அலறவே, அவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன விடுதி பணியாளர்கள் விரைந்து சென்று பெண்ணை மீட்டனர். 

உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சர்ச்சை செயலை செய்த இளைஞர் பரத் படேலை கைது செய்தனர்.