19 வயது இளம்பெண் நால்வர் கும்பலால் கட்டிப்போட்டு கூட்டுப் பலாத்காரம்; திருட்டுக்கும்பல் துணிகர செயல்.!Gujarat Ahmedabad Girl Gang Raped 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஷிலாஜ் பகுதியில் வசித்து வருபவர் 41 வயதுடைய பெண்மணி. இவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். 

இதனை நோட்டமிட்ட மர்ம கும்பலானது, சம்பவத்தன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. அங்கு பெண்ணை கட்டிப்போட்டு ரூ.3 இலட்சம் ரொக்கம், மடிக்கணினி போன்றவற்றை திருடியுள்ளது. 

மேலும், திருடர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றக்கூறி பெண்மணி அலறிய நிலையில், சத்தம் கேட்டு 19 வயது பெண்மணி அதிர்ச்சியுடன் வந்துள்ளார். 

அவரைக்கண்ட திருட்டுக்கும்பல், நால்வர் சேர்ந்து அவரை கட்டிப்போட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.