விண்ணைமுட்டிய 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜெ' கோஷம்.. திரும்பும் இடமெல்லாம் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.!

விண்ணைமுட்டிய 'ஜெய் ஸ்ரீராம்', 'பாரத் மாதா கி ஜெ' கோஷம்.. திரும்பும் இடமெல்லாம் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு.!


Gujarat Ahmadabad BJP Workers Slogan JaiSri Ram Bharat Matha Ki Jai Victory 4 States BJP

அகமதாபாத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் வீதிகளில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் சென்றுள்ளார். நடைபெற்று முடிந்த உத்திரபிரதேசம், உத்திரகன்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

இதில், உத்திரபிரதேசம் மாநில அரசியல் வரலாற்றில் 37 வருடங்கள் கழித்து ஆளும் கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை அமைகிறது. இதனால் இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராகவுள்ளார். இந்த வெற்றிகொண்டாட்டம் இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடையே சிறப்பிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், அகமதாபாத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் அம்மாநில மக்கள் வீதிகளில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் செல்லும் வழிகளில் எங்கும் 'ஜெய் ஸ்ரீராம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெ' ஆகிய கோஷங்கள் எழுப்பப்பட்டன.