அவரை புதைத்த இடத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க...15 வயது சிறுமியின் அதிர வைக்கும் தற்கொலை கடிதம்.!

அவரை புதைத்த இடத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க...15 வயது சிறுமியின் அதிர வைக்கும் தற்கொலை கடிதம்.!


gujarat-17-yr-old-girl-hangs-herself-after-cousin-suicide

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமோல் என்னும் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராமேல் என்னும் பகுதியில் தனது பெற்றோர் மற்றும் மூன்று சகோதர்களுடன் அந்த சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் அண்ணன் முறையான இளைஞரின் தற்கொலை முடிவு சிறுமியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

suicide

அந்த இளைஞரின் மனைவி விபத்து ஒன்றில் உயிரிழந்ததை அடுத்து மனவேதனையில் இருந்த அந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமி அந்த இளைஞருடன் நெருக்கமான அன்பு கொண்டிருந்த நிலையில் இளைஞரின் இழப்பை ஏற்று கொள்ள முடியவில்லை.

அதனை அடுத்து அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன்பின் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கடிதம் கிடைத்துள்ளது.

அக்கடிதத்தை பிரித்து வாசித்த போது அதில் அந்த சிறுமி என் அண்ணன் இல்லாத உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. என் அண்ணனை புதைத்த அதே இடத்திலேயே என்னையும் புதைச்சிடுங்க என்று எழுதியிருந்தது. சிறுமியின் முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.