முக்கிய செய்தி.! உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி.! மத்திய அரசு அசத்தல்.!

முக்கிய செய்தி.! உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி.! மத்திய அரசு அசத்தல்.!



govt-insurance


இந்திய அரசு சமுக நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை வழங்கி வருகின்றது. தற்போது கொரோனா தொற்றால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பம் நிதி சுமையில் இருந்தால், இந்தச் சுமையில் இருந்து வெளிவருவதற்கு இரண்டு மலிவு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய அரசு வழங்கியது

எனவே உங்களுக்கு அறிமுகமானவர்கள் குடும்பத்தில் யாரேனும் மரணம் அடைந்தால் அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர்களது பாஸ்புக் பதிவில் 2019 ஏப்ரல் 01 முதல் 2020 மார்ச் 31 வரை வங்கி கணக்கிலிருந்து ரூ .12 /- அல்லது ரூ.330 /- கழித்திருந்தால், அதனை மேற்கோள் காட்டி இறந்தவரின் உறவினர்களிடம் வங்கிக்குச் சென்று இரண்டு லட்சம் ரூபாய்க்கு காப்பீட்டுத் தொகைக்கான உரிமைக்கோரலைச் சமர்ப்பிக்கச் சொல்லுங்கள்.

2015 ஆம் ஆண்டிலிருந்து, பெரும்பாலான வங்கிகளில் ஒவ்வொரு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் இரண்டு மலிவு காப்பீட்டுத் திட்டங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.

1 - பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா (பி.எம்.ஜே.ஜே.பி.ஒய்) ரூ. 330 /-

2 - பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா பீமா யோஜனா (பி.எம்.எஸ்.பி.ஒய்) ரூ. 12 /-  

பெரும்பாலான வங்கிகள் இந்த படிவத்தை அவர்களாகவே பூர்த்தி செய்துள்ளனர். மேலும் இந்த இரு காப்பீட்டின் வருடாந்திர தவணையும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களது சேமிப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்படுகிறது. இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம்  ரூபாய் நிதி உதவி கிடைக்க உதவியாய் இருப்போம்.