இந்தியா

கொரோனா குறித்த சந்தேகமா? பதிலளிக்க இதோ வந்துவிட்டது புதிய வசதி! மத்திய அரசு அறிமுகம்

Summary:

Government announces my gov corono helpdesk

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸால் இந்தியாவில் 170க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மேலும் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா குறித்து மக்களை பீதியடைய செய்யும் வகையில், சமூக வலைதளங்களில் ஏராளமான போலி செய்திகளும், வீண்வதந்திகளும் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மக்களுக்கு கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு MyGov கொரோனா ஹெல்ப்டெஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளது. 

அதன்படி 9013151515 என்ற எண்ணை வாட்ஸ் அப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்.  அதன் மூலம் கொரோனா குறித்து நமக்கு எழும் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம். மேலும் கொரோனா குறித்த சந்தேகங்களை தெரிவிக்க மத்திய அரசு (ncov 2019@gov.in) என்ற மின்னஞ்சலையும்  வெளியிட்டுள்ளது.


Advertisement