இந்தியாவின் மோசமான மொழி இதுவா! வெடித்த பெரும் சர்ச்சை! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்!!

இந்தியாவின் மோசமான மொழி இதுவா! வெடித்த பெரும் சர்ச்சை! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம்!!



google-ask-abologies-to-kannada-speaking-peoples

கூகுள் தேடுபொறியில் இந்தியாவின் மோசமான மொழி எது என சிலர் தேடிய போது அதற்கு கன்னடம் என்று பதில் வந்துள்ளது. அதுதொடர்பான ஸ்கிரீன் சாட்டுகளை ஏராளமானோர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இதனால் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட பலரும் பெரும் ஆவேசம் அடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து கர்நாடக பண்பாட்டுத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி, கூகுள் நிறுவனம் கன்னட மொழியை இழிவு படுத்தியுள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  கன்னட மொழியை இழிவுபடுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில்,‛இது போன்று கூகுள் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது. கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து கிடையாது. இதற்காக கூகுள் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மேலும் உடனடியான இப்பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.