கடைக்காரருக்கு மரண பீதியை காட்டிய 15 வயது சிறுமி.. பிளேடால் சரமாரி கிழி.!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் மளிகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 15 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
பிளேடால் தாக்கிய சிறுமி
பின் மீண்டும் சிறிது நேரம் கழித்து வாங்கிய பொருட்களை கடையில் கொடுத்த சிறுமி அதற்கான பணத்தையும் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் பணத்தை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி கடைக்காரரை அவதூறாக திட்டிய நிலையில், அங்கிருந்த பிளேடை எடுத்து அவரது கை மற்றும் வயிறு பகுதியில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
திடீரென தாக்குதல் :
Caught on camera: A 15-year-old girl attacks a shopkeeper with a blade after he refused to take back her purchase 🏪🔪. The shocking incident leaves him injured.#UttarPradesh #ShockingNews #ViralVideo #CrimeNews pic.twitter.com/Q7TopkHCr4
— HK Chronicle (@HK_Chronicle_) May 4, 2025
இதையும் படிங்க: விபரீத சடங்கு.. உ.பி-யில் மாப்பிள்ளையை வச்சு செய்த மணமகள் தரப்பு.! அதிர்ச்சி காரணம்.!
போலீஸ் விசாரணை
இதனால் படுகாயமடைந்தவர் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உங்களை யாரு காப்பாத்துவா? - நீதிகேட்ட மாணவிகளின் ஆடைகளை கிழித்து பலாத்கார மிரட்டல்.!!