பிறந்த பச்சிளங்குழந்தையை இளைஞனின் வீட்டுவாசலில் போட்டு சென்ற பெண்.! வெளியான திடுக்கிடும் காரணம்!!
பால்கர் மாவட்டம் பட்கா கிராமத்தில் வசித்துவருபவர் ரமேஷ் ஷிண்டே. இவரது மகன் ராகுல். இவருக்கு சரிகா என்ற 23 வயது நபருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.இவர்களது பழக்கம் காதலாக மாறிய நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது காதலில் எல்லை மீறியநிலையில் சரிகா கர்ப்பமடைந்துள்ளார். அதனை தொடர்ந்து ராகுல் சரிகாவை கைவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த சரிகாவிற்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து சரிகா மற்றும் அவரது சகோதரி குழந்தையை போர்வையில் சுற்றி ராகுல் வீட்டு திண்ணையில் விட்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தங்களது வீட்டு திண்ணையில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதை கண்ட ரமேஷ் ஷிண்டே உடனடியாக இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து நடந்தவற்றை தெரிந்துகொண்ட போலீசார் ராகுல் மற்றும் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை திண்ணையில் விட்டு சென்ற சரிகா மற்றும் அவரது சகோதரியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.