சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவம்! மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்


Girl threatened suicide after losing job

அரியானா மாநிலம் குர்கிராமில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டி போன வேலையை திரும்ப பெற்றுள்ளார். 

குர்கிராமில் உள்ள சைபர் சிட்டியில்  செக்டார் 18ல் தனியார் கண்சல்டன்சி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நீண்ட நாட்களாக வேலைப் பார்த்து வந்த இளம்பெண் ஒருவரை அதன் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. 

gurugram

இதனால் மிகவும் மனமுடைந்த அந்த பெண் அதே நிறுவனத்தின் மொட்டை மாடிக்கு ஏறி சென்றுள்ளார். அங்கிருந்து சத்தமாக குரல் எழுப்பி தான் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறியுள்ளார். 

இதனை அறிந்து அவருடன் பணிபுரிபவர்கள் ஓடி வந்து எவ்வளவோ கூறியும் அவர் கட்டிடத்தின் விளிம்பிலிருந்து கீழே இறங்குவதாயில்லை. காவல் துறையினர் வந்து எச்சரித்த போதும் தனது துப்பட்டாவை கீழே வீசிய அவர் தானும் குதித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 

gurugram

கடைசியில் அவரை பணியிலிருந்து நீக்கிய அந்த தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்து அந்த பெண்ணை மீண்டும் பணியில் சேர்த்துகொள்வதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னரே அந்த பெண் ஒருவழியாக சமாதானம் ஆகி கீழே இறங்கி வந்தார்.