தமிழகம் இந்தியா

அடேங்கப்பா என்ன ஒரு துணிச்சல்டா.. தாலி கட்டும் நேரத்தில் தனது செயலால் தூள் கிளப்பிய மணமகள், ஆடிப்போன குடும்பத்தார்.!

Summary:

அடேங்கப்பா என்ன ஒரு துணிச்சல்டா.. தாலி கட்டும் நேரத்தில் தனது செயலால் தூள் கிளப்பிய மணமகள், ஆடிப்போன குடும்பத்தார்.!

தன் திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்துங்கள் என  மணமகளே கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தேவரடியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மும்பையில் வேலை செய்து வரும் ஐயப்பன் என்ற 27 வயது இளைஞருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அவர்களின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக நடைபெற்றுவந்தது.அப்பொழுது மணமேடையில் மணமகன் மாங்கல்யத்தை எடுத்து மணமகளின் கழுத்தில் கட்ட முற்பட்ட போது, மணமகள் திடீரென மேடையைவிட்டு எழுந்துள்ளார். 

மேலும் நான் மைனர் எனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. மேலும் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை . என்னை எனது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர் .எனவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்துங்கள் மீறி  தாலி கட்டினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என அனைவர் முன்பும் கூறியுள்ளார்.

 மேலும் அது மட்டுமின்றி உடனடியாக போலீசாருக்கு போன் செய்து தனக்கு கட்டாயம் திருமணம் செய்து வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் திருமணத்தை தடுத்து நிறுத்தி இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement