இந்தியா

திருமணத்திற்கு இருநாட்களே இருக்க, வீட்டிற்குள் புகுந்து இளைஞர் செய்த கொடூர காரியம்! வைரலாகும் பகீர் வீடியோ!

Summary:

Girl and her father killed by youngman before 2 days of marriage

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அஞ்சால். 19 வயது நிறைந்த இவருக்கு இருநாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடந்த 27ம் தேதி இரவு திருமண கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில் உறவினர்களுடன் திருமண குதூகலத்தில் இருந்த  அஞ்சால் தோழிகளுடன் சேர்ந்து நடனம் ஆடிக்கொண்டு  இருந்துள்ளார். அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். அதில் மணப்பெண் அஞ்சால் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது தந்தை ராஜ்குமார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் அஞ்சாலின் சகோதரர் காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சாகர் என்ற இளைஞர் அஞ்சாலை ஒருதலையாக காதலித்ததாகவும், அவர் பின்னாலேயே சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு அஞ்சால் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையிலேயே அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்தே சாகர் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்குபதிவு செய்து கொலையில் தொடர்புடைய சாகரின் நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான சாகரை தீவிரமாக  தேடி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement