
Summary:
gas cylinder rates reduced
சில நாட்களுக்கு முன்பு மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1000 ரூபாயை தாண்டியது. தன்னால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலை குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் குறைந்து வருகிறது. ஆனால் இத்தனை நாட்களாக எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவில்லை.
இந்நிலையில் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52-ம், மானியமில்லா எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.133-ம் குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. தொடர்ந்து 6 மாதங்களாக உயர்ந்து வந்த எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது தான் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement